Thaaikarangal Trust: 7-Day Computer Workshop at VIT University (14.05.2023 - 21.05.2023)
May 14th 2023
கடந்த 14.05.2023 முதல் 21.05.2023 வரை நமது Thaaikarangal Charitable Trust Thaaikarangal மூலம் 7நாள்க்கள் கணினி பயிலரங்கம் VIT University வேலூரில் நடத்தப்பட்டது. இந்த கணினி பயிலரங்கில் தமிழகம் முழுக்க இருந்து சுமார் 50 பார்வையற்ற நபர்கள் வந்து கலந்து கொண்டு, மிக சிறப்பாய் கணினியை கற்றுச் சென்றனர். இதன் நிறைவு விழாவில் வந்து கலந்து கொண்டு, மிகச் சிறப்பாய் கணினியை கற்றுக் கொண்ட ஒரு மாணவிக்கு மடிக்கணினியும். 6 மாணவர்களுக்கு பென்டிரைவும் வழங்கியதோடு, பயிலரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழையும் நமது அறக்கட்டளை சார்பாக வழங்கிய பாலமுரளி ஐயா அவர்களுக்கும். வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஃcsrd துறை இயக்குனர் முனைவர் சௌந்தரராஜன் ஐயா அவர்களுக்கும். தர்ஷினி அறக்கட்டளை சார்ந்த சௌமியா அம்மையார் உள்ளிட்ட பிற அன்னையர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். மேலும் இந்த பயிலரங்கம் மிக சிறப்பாய் நடைபெற உதவிய அனைத்து தன்னார்வலர்களுக்கும். தர்ஷினி, பொற்கரங்கள் அரிமா சங்கம் திருமதி Padma Anand அம்மையார் உள்ளிட்ட அனைத்து கொடையாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.