Thaaikarangal Trust Launches Free Accommodation for Visually Impaired Students Near Annanagar Sridevi Hospital

2022

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் பார்வையற்ற மாணவர்களுக்கான இலவச தங்கும் விடுதி அண்ணாநகர் ஸ்ரீதேவி மருத்துவமனை அருகில், Thaaikarangal charitable trust. ஆல் நேற்று துவங்கப்பட்டது. இந்த விடுதியை நடத்த எந்த வாடகையும் இன்றி இடம் அளித்ததோடு, நேரடியாக வந்து விளக்கேற்றி மற்றும் ரிப்பன் கத்தரித்து துவங்கி வைத்த உயர்திரு ஐயா சேது குமணன் அவர்களுக்கும், இந்த விடுதியினை நடத்துவதற்கு பேர் உதவி செய்ய முன்வந்துள்ள தர்ஷினி அன்னையர்களுக்கும், எல்லா சூழலிலும் எங்களோடு துணை நிற்கின்ற Padma Anand அம்மையார் அவர்களுக்கும் இந்த இடத்தை நாங்கள் பெறுவதற்கு உதவியாக இருந்த அருள் விழிகள் அமைப்பை சார்ந்த பத்மநாதன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். இவர்களது பேர் உதவிகளால் சில பார்வையற்றவர்கள் அரசு பணி கிடைத்து நிச்சயம் தங்களது சொந்தக் காலில் வாழ்க்கையில் நிற்பார்கள். இந்த விடுதி மென்மேலும் சிறப்புற நடைபெற தங்களால் முடிந்த தையும் தாங்கள் செய்யலாமே.

Back To Top