Inauguration of Uma Srinivasan Memorial Educational Assistance Fund
May 2022
வாசிப்பாளர் உமா சீனிவாசன் நினைவு கல்வி உதவித்தொகை துவங்கி வைக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இரண்டு பார்வையற்ற மாணவர்/ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டன. மேலும் 50 பார்வையற்ற ரயில் வியாபாரிகளுக்கு அவர்களுக்கான வியாபார பொருட்கள் வழங்கப்பட்டன. தாய் கரங்களில் உமா சீனிவாசன் நலத்திட்டம் வழங்குதல் விழாவின் மூலம் நேற்று சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் வந்து கலந்து கொண்ட நேதாஜி உ. கணேசன், சென்னை மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர், 38வது வட்ட மாமன்ற உறுப்பினர் அவர்களுக்கும். திருமதி உமா சீனிவாசன் அவர்களின் கணவர் திரு சீனிவாசன் அவர்களுக்கும். பொற்கரங்கள் அரிமா சங்கத் தலைவர் திருமதி Radha Kris அவர்களுக்கும். CSI காது கேளாதோர் பள்ளி முதல்வர் திரு ஆல்பர்ட் ஜேம்ஸ் அவர்களுக்கும். அரிமா மாவட்ட தலைவர் திருமதி Padma Anand அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்த விழா சிறப்புற நடைபெற உதவிய கொடையாளர்களான CSI காதுகேளாதோர் பள்ளி, சாந்தோம், சென்னை நிர்வாகத்திற்கும். TNDAP அமைப்பை சார்ந்தவர்களுக்கும். திருமதி கற்பகம் அம்மையார் அவர்களுக்கும். ஸ்ரீ நிகேதன் சீனிவாசன் அவர்களுக்கும். பொற்கரங்கள் அரிமா சங்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். இதற்கு மட்டும் இன்றி எப்போதும் எங்களோடு நிற்கும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள்.