120 பார்வை மாற்றுத்திறனாளிகளை திருப்பதி அழைத்துச் சென்றிருந்தோம்
Jun 2022
மீனம்பாக்கம் அரிமா சங்கத்தின் உதவியுடன் 120 பார்வை மாற்றுத்திறனாளிகளை திருப்பதி அழைத்துச் சென்றிருந்தோம். இந்த பயணத்தில் எந்தத் தடையும் இன்றி பெருமாளை எமது பார்வை மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்தார்கள். அதனோடு இந்த பயணத்தில் வந்த அனைத்து பார்வையற்ற பெண்களுக்கும் தங்க மூக்குத்தி வழங்கப்பட்டன. மிகச் சிறப்பாய் இந்த பயணத்தை திட்டமிட்டு, எந்த சிறிய அளவு குறைகளும் இன்று அழைத்துச் சென்று வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் இது புதிய மற்றும் மகிழ்ச்சிகரமான பயண அனுபவமாக அமைந்தது.